இன்று முதல்
விடியலை நீ எழுப்பு...
பகல் ரெண்டு கேள்
பகை மட்டும் பாடு...
வரனுக்கு மையம் பார்
காற்றுக்குக் கால்கள் பார்...
இதயம் போல் உழை
இமைகள் போல் களை...
உன்னிடம் நியாயம் கேள்
உலகுக்குத் தீர்ப்பு சொல்...
காற்றை வடிகட்டு
கடலை வாய் கொப்பளி...
நிலவை நிறம் மாற்று
நிலத்தை விரிவு செய்...
ஐந்தாவது வேதம் சொல்
ஆறாவது பூதம் கேள்...
ஏழாவது அறிவைத் தேடு
எட்டாவது பிறவி எடு...
ஒன்பதாவது திசையைத் திற
பத்தாவது கிரகம் பற...
பட்டாம்பூச்சிக்கு பண்ணை வை
பருவம் முதிராமல் முறையிடு...
பூமியின் வேகம் கேள் !
அதற்கு முன் ஓடு !
நட்சத்திரங்களின் தூரம் கேள்
நடந்து போகப் பழகு...
உலகுக்கு வெளியே ஒரு
ஓய்வறை கட்டு...
பூமியின் தலையில்
போடு ஒரு குட்டு...
தொடரும்
இன்று முதல் விடியலை நீ எழுப்பு..!
Pages
Subscribe to:
Comments (Atom)
Filed Under :
Friday, July 23, 2010