சரி
தவறு
என்ற சொற்களைக்
குற்றப் புத்தகத்திலிருந்து
நீக்கிவிடலாம்...
தவறு
இழிவான சொல் இல்லை...
சரி
உயர்வான சொல் இல்லை...
தவறை
அறிந்து செய்தால் பகை...
அறியாமல் செய்தால் பாவம்...
சரியோ,தவறோ
பாடப்புத்தகத்தில்
மட்டுமல்ல...
வேதப்புத்தகத்திலிருந்தும்
விலக்க வேண்டிய
வார்த்தைகள்...
தவறு செய்யும் பொழுது
செய்பவனுக்கு
சரியாகவே படுகிறது...
முடிந்துபோன ஒரு செயலை
மீண்டும் ஒரு முறை
செய்யும் பொது...
முன்பை விட நேர்த்தியாக
செய்வோம்...
முன்பிருந்த தவறுகள்
களையெடுக்க படுவதே
காரணம்...
எல்லா செயலும்
செய்யும் போது சரியே...
முடிந்த பிறகு
தவறாகிறது...
நீங்களோ நானோ
மீண்டும் ஒரு முறை
குழந்தை பருவத்தை
அடைந்தால்...
சில தவறுகளை
சரி செய்து வாழ்ந்து விடலாம்
எனத்தோன்றும்...
தவறு
காலம் தாழ்த்திய பிறகே
சரியாகிறது...
சரி
காலம் தாழ்த்திய பிறகே
தவறாகிறது...
சரியோ,தவறோ இவை
நிரந்தரமற்ற வார்த்தைகள்...
பாடப்புத்தகத்தில்
மட்டுமில்லை
வேதப்புத்தகத்திலிருந்தும்
விலக்க வேண்டிய
சரி,தவறு
சரியா ?
தவறா ?
(தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)
Filed Under :
Friday, July 23, 2010
0 comments:
Post a Comment